என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கமல் நாத்"
பனாஜி:
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா எம்.பி. பனாஜியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தேசிய முற்போக்கு கூட்டணி அரசும் வாஜ்பாய் அரசு போன்று தோல்வியை சந்திக்க போகின்றன. 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் அரசு இந்தியா ஒளிர்கிறது என்ற தலைப்பில் பிரசாரம் செய்து தோல்வி அடைந்தனர். அதே நிலைதான் இப்போதும் ஏற்படும்.
நான் ஒரு ஜோதிடர் அல்ல. ஆனால் நான் ஒன்றை உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். பா.ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து அதிக இடங்களில் வெற்றி பெறும்.
அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார். பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் தனது 5 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றவில்லை. அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மோடியும், பா.ஜனதாவும் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றனர். நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ராணுவத்தை பயன்படுத்துகின்றனர் இது வெட்கப்படக் கூடியது. அரசியலுக்காக ராணுவத்தை பயன்படுத்தக் கூடிய அவரது செயல் கண்டிக்கதக்கது. இந்திய ராணுவம் நரேந்திரமோடியின் அரசுக்கு சொந்தமானது அல்ல. அது நாட்டுக்கும், மக்களுக்கும் சொந்தமானது.
அவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களையும், நமது வீரர்களின் தியாகத்தையும் அவமதித்துள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவது குறித்து காங்கிரசுக்கு பா.ஜனதா பாடம் நடத்த தேவையில்லை. காங்கிரஸ் பழமை வாய்ந்த கட்சி. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என 2 பிரதமர்களை இழந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் கூறும்போது, “மத்தியில் ஆட்சி அமைக்க தேவைப்படும் அளவுக்கு காங்கிரசுக்கு பெரும் பான்மை கிடைக்காது. எனவே தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம்“ என்றார். #anandsharma #rahulgandhi #pmmodi
5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.
இதையடுத்து, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
பின்னர் முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தனர். இவர்களில் திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் கமல்நாத் - ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக கமல் நாத் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வரும் 17-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். போபாலில் உள்ள லால் பாரடே கிரவுண்டில் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. #MadhyaPradeshCM #KamalNath
மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.
இதையடுத்து, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று மதியம் ஆளுநரை சந்தித்தனர். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் கடிதம் அளித்தனர். இந்த சந்திப்பின்போது திக்விஜய் சிங், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல் நாத், “காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 121 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது” என்றார். #MadhyaPradeshElections2018 #KamalNath
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்